சட்டவிரோத மின்சார கொள்வனவு – கடந்த 8 மாத காலப்பகுதியில் மின்சார சபைக்கு 08 கோடி ரூபா நிதி இழப்பு – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Saturday, November 4th, 2023

சட்டவிரோதமான முறையில் மின்சாரம் கொள்வனவு செய்தமையினால் 8 மாத காலப்பகுதியில் இலங்கை மின்சார சபைக்கு சுமார் 08 கோடி ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

சிலர் மின் மாணிகளை மாற்றியமைத்ததாலும், பல்வேறு உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மின்சாரம் கையகப்படுத்துவதாலும் சபைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவ்வருடம் ஜனவரிமுதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் இவ்வாறு மின்சாரம் கொள்வனவு செய்தமையால் சபைக்கு ஏழு கோடியே தொண்ணூற்று இலட்சத்து எழுபத்து நான்காயிரத்து எண்ணூற்று ஐம்பத்தேழு ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கடந்த எட்டு மாதங்களில், மின் மாணிகளை மாற்றுவது தொடர்பாக, 1,041 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

அதன் மூலம் இலங்கை மின்சார சபையில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு ஏழு இலட்சத்து இருபத்தி ஏழாயிரத்து அறுநூற்று நாற்பத்தி ஒன்பது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், மின்கம்பிகளில் பல்வேறு சாதனங்கள் பொருத்துவது தொடர்பாக 81 சோதனைகள் நடத்தப்பட்டு அதில் இருபத்தி ஆறு லட்சத்து நாற்பத்து ஏழாயிரத்து இருநூற்று ஏழு ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அவர்களிடமிருந்து முப்பத்தாறு இலட்சத்து தொண்ணூற்று ஐந்தாயிரத்து ஐநூறு ரூபா தண்டப்பணமாகவும் அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: