சட்டவிரோதமாக விமானத்தில் கடத்தப்படும் சுறா மீன் இறகுகள்?

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக சுறாமீன்களின் இறகுகள் ஹொங்கொங்கிற்கு கடத்தப்படுவதாக, ஏ.எஃப். பி செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
மிகவும் அரிய வகையான சுறாமீன்களின் இறகுகள் மறைக்கப்பட்டு விமானத்தின் ஊடாக ஹொங்கொங்கிற்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
தடை செய்யப்பட்ட நிலையிலும் ஹொங்கொங்கில் சுறாமீன்களின் இறகுகள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.
கடந்த மாத ஆரம்பத்தில் 989 கிலோ கிராம் எடைகொண்ட சுறாமீன்களின் இறகுகள் கொழும்பில் இருந்து சிங்கப்பூரின் ஊடாக ஹொங்கொங்கிற்கு கடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட மீன் இறகுகளுடன், அரிய வகையான இறகுகளும் கடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கிறது போயஸ் கார்டன்!
மாணவி வித்தியா கொலையாளிக்கு மற்றுமொரு வழக்கிலும் மரணதண்டனை - யாழ் மேல் நீதிமன்றம்!
சமூக ஊடங்களை முடக்குமாறு பாதுகாப்பு அமைச்சே வேண்டுகோள் விடுத்தது - தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்கு...
|
|