கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இதுவரை தீர்மானமில்லை – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Saturday, July 3rd, 2021

கொரோனான அச்சுறுத்தல் தொடர்பில் தற்போது அமுலுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் தற்போது டெல்டா தொற்றின் அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதேநேரம் நாட்டில் இதுவரை 05 பேருக்கு டெல்டா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த தொற்று மேலும் பரவலடைவதை தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நாளை ஞாயிற்றுக்கிழமைமுதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பாக இதுவரை எந்தவித இறுதித்  தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: