சட்டவிரோதமாக நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி – இந்திய மீனவர்களின் படகொன்று கடற்படை படகொன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!
Thursday, August 1st, 2024
சட்டவிரோதமாக நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகொன்று இலங்கை கடற்படையினருக்கு சொந்தமான படகொன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த படகில் நான்கு இந்திய மீனவர்கள் பயணித்துள்ளனர். அவர்களைக் கைது செய்வதற்கு இலங்கை கடற்படை முயற்சித்த போது, மீனவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதில் பயணித்த மீனவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் ஏனைய மூவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
காணாமல் போயுள்ள மீனவரை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கைக்கு சர்வதேச நிறுவனங்கள் ஒத்துழைப்பு!
சமூக சேவை உத்தியோகத்தருக்கான விண்ணப்பம் கோரப்பட்டு இரு வருடங்களாக பரீட்சை நடாத்தாமல் இழுத்தடிப்பு - ...
24 இலட்சம் பேருக்கு அஸ்வெசம வழங்கிய பின்னர் முழுமையாக மீளாய்வு செய்யப்படும் -நிதி இராஜாங்க அமைச்சர் ...
|
|
|


