சட்டமா அதிபர் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனையை மீண்டும் நிராகரித்துள்ளது அரசியலமைப்புச் சபை!

Thursday, June 27th, 2024

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனையை அரசியலமைப்புச் சபை மீண்டும் நிராகரித்துள்ளது.

சட்டமா அதிபரின் பதவிக் காலம் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக அரசியலமைப்புச் சபை நேற்று (26) மீண்டும் கூடியது.  இதன்போது மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.  

இந்த வாக்கெடுப்பில் சட்டமா அதிபரின் பதவிக் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு எதிராக 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்,  இதனடிப்படையில் இந்த யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: