சட்டமா அதிபருக்கு எதிராகச் செயற்படுவதற்கு சட்டத்தில் இடமில்லை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!!
Thursday, March 21st, 2024
சட்டமா அதிபரினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு எதிராக செயற்படுவதற்கு அமைச்சர்களுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ சட்டத்தில் இடமில்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இணையவழி பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அதனை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், உயர்நீதிமன்றினால் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற குழுக்கூட்டங்களிலேயே அது தொடர்பில் ஆராயமுடியும் என்பதுடன், நீதிமன்றப் பரிந்துரைகள் தொடர்பாக நாடாளுமன்ற குழுக்கூட்டங்களில் சட்டமா அதிபரினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு எதிராக செயற்படுவதற்கு அமைச்சர்களுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ சட்டத்தில் இடமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கூறுவதற்கு சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


