சட்டத்தின்படியே பிரசார நடவடிக்கை நடைபெற வேண்டும் என்றால் கட்சித் தலைவர்களை அழைத்து கூட்டங்கள் நடத்துவது ஏன் – ரட்ணஜீவன் கூலிடம் சி.தவராசா கேள்வி!

Saturday, June 20th, 2020

தேர்தல் பிரசார நடவடிக்கைகளயின் பொது சட்டம் இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கருத்தை விஷேட சூழலைக் கருத்திற் கொண்டு தளர்த்த வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவிடம் வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகருமான சி.தவராசா கோரிக்கை விடுத்துள்ளார்.


கடந்;த 17 ஆம் திகதி தேர்தல் பணியகத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில்; ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் கூட்டத்தில் கலந்துகொண்ட சி;.தவராசா சட்டங்கள் ஆக்கப்படும்போது அவை சாதாரண சூழ்ந்pலையை கருத்திற்கொண்டே ஆக்கப்படுகின்றன.


ஆனால் அவ்வாறான சாதாரண சூழல்களுக்கு பதிலாக விஷேட சூழல்களில் அல்லது சட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்த முடியாத சூழலில் தேர்தல் ஆணைக்குழு நடைமுறை சாத்தியமாக தனது முடிவுகளை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாத இன்றியமையாச் சூழலில் (னுழஉரஅநவெ யேஉநளளவைல) நிலைமைக்கு ஏற்ப நடைமுறை சாத்தியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டியிருந்த சி.தவராசா ஜுன் 20 ஆம் திகதிக்கு தேர்தலை நடத்த தீர்மானித்ததும் ஒரு நடைமுறைச் சாத்தியமான சட்டமீறல் என்றும் சுட்டிக்காட்டினார்.


மேலும் சட்டத்தின்படியே சகல பிரசார நடவடிக்கைகளும் நடைபெற வேண்டும் என்றால் கட்சித்த தலைவர்களையும் கட்சியின் பிரதிநிதிகளையும்; அழைத்து கூட்டங்கள் நடத்தவேண்டிய தேவையும் இல்லை என்பதையும் அவர் இதன்போது கூட்டிக்காட்டியிருந்தார்.


தேர்தல் பிரசாரங்கள் துண்டுப் பிரசுரங்கள் விநியோகத்தல் பதாதைகளை விநியோகித்தல் தேர்தல் சட்ட விதிகளுக்கு அமையவே நடைபெறவேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூலின் கருத்துக்கு பதிலளிக்கும்போதே சி.தவராசா இவ்வாறு தெரிவித்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: