சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கிலத்தில் நடத்துவது தொடர்பான யோசனை நாடாளுமன்றில் தோற்கடிப்பு!
Tuesday, March 21st, 2023
சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கில மொழியில் நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பெரும்பான்மை வாக்குகளால் இன்று (21) நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது, அதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.
இந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு வாக்கெடுப்பு தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரினார். அதன்படி வாக்கெடுப்பு நடைபெற்றது.
அதில் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக 113 வாக்குகளும் ஆதரவாக ஒரு வாக்கும் பதிவாகியிருந்தன.
இதில் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி மாத்திரம் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
யாழ்.குடாநாட்டில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு: நுகர்வோர் பெரும் சிரமம்!
யாழ் மாவட்டத்திற்கு மேலும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் தேவை – மாவட்ட கொரோனா ஒழிப்பு...
நலன்புரி கொடுப்பனவுகளுக்கான விண்ணப்பங்கள் ஆராயப்படுகின்றன - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க த...
|
|
|


