சங்கானையில் திருட்டு முயற்சி : முகநூல் செயலியூடாக முறியடிப்பு!
Thursday, May 17th, 2018
சங்கானை, அராலி வீதி மற்றும் குளத்தடி வீதியில் கடந்த சில நாள்களாக திருடர்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திருட்டு முயற்சியை முகநூல் செயலி ஊடாக இணைந்த இளைஞர்கள் முறியடித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –
இந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் யன்னல் கண்ணாடிகள் கல்லால் எறிந்து உடைக்கப்பட்டுள்ளன. மாவடி வைரவர் ஆலயத்தின் அருகில் உள்ள வளர்ப்பு நாயும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.அராலி வீதியில் உள்ள அலுமினிய பொருத்துக்கள் செய்யும் கடையின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன.
திருடர்களின் நடமாட்டம் ஏற்கனவே காணப்படும் நிலையில் இந்தச் சம்பவங்களும் திருடர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருடர்கள் ஊருக்குள் உலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி இளைஞர்கள் முகநூலில் காணப்படும் குழு அரட்டையில் (குறூப் சட்) தகவல் வழங்கி இளைஞர்களை ஒருங்கிணைத்து திருட்டு முயற்சியை முறியடித்துள்ளனர்.
Related posts:
|
|
|


