சக்திமிக்க நாடொன்றை கட்டியெழுப்பும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு – ஜனாதிபதி

Thursday, December 22nd, 2016

சக்திமிக்க நாடொன்றை கட்டியெழுப்பும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற சமுர்த்தி சிறுவர் சமூக கலாசார இலக்கிய விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எதிர்கால சந்ததியினருக்கு சிறப்பான நாடொன்றை கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக கூறினார். நாடு தொடர்பில் அரசாங்கத்திற்கு உள்ள பொறுப்புக்களை உயர்வான வகையில் எதிர்கால சந்ததியினருக்காக மேற்கொள்வதும், வலுவான நாடொன்றை கட்டியெழுப்பும் பொறுப்பும் அரசாங்கத்திற்கு உண்டு. நாளைய உலகின் நாட்டின் பிள்ளைகளின் இலக்கிய ஆற்றலை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலக்கியத்தைக் கையாளும் போது அதன் சிறப்பம்சங்களுடன் சிறுவர் சமூகத்தினரை உருவாக்கும் பொறுப்பு நாட்டில் வளர்ந்தோருக்கு உண்டு. நாட்டின் அனைத்து இன மக்களுக்கு மத்தியில் சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் ‘லமா கெக்குலு’ என்ற சமூக பணிக்காக மாவட்ட செயலாளர்களுக்கும், வாழ்வின் எழுச்சி திணைக்கள அதிகாரிகளுக்கும் ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கப்பட்டது.

z_fea800

Related posts: