க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி!
Thursday, December 13th, 2018
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முதற்கட்ட பணி இம்மாதம் 23 ஆம் திகதி முதல் ஜனவரி முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டப் பணி ஜனவரி 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
அத்துடன் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் தலைமை அதிகாரிகளுக்கான தெளிவுபடுத்தும் நிகழ்வு எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கோப்குழு அறிக்கை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பு!
கொள்கை தளராது தமிழ் மக்களின் விடிவுக்காக உழைத்துவரும் ஒரே தலைவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே - வவுனியாவ...
தனியார் வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தடை விதிப்பு!
|
|
|


