க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் நாளை வெளியாகும்!
Thursday, December 27th, 2018
கடந்த ஆண்டில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவித்தன.
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை கணினிமயப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. நாளை பரீட்சைகள் திணைக்கள இணையத்தில் பெறுபேறுகள் வெளியிடப்படும். அத்துடன் பாடசாலைப் பரீட்சார்த்தியின் பெறுபேறு பாடசாலைகளுக்கும் தனியார் பரீட்சார்த்திகளின் பெறுபேறு தபால்மூலம் அன்றைய தினமே அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
பரீட்சைப் பெறுபேறுகளை http://www.doenets.lk அல்லது http://www.exams.gov.lkh என்ற இணைய முகவரிகளில் பார்வையிட முடியும்.
Related posts:
பன்டோரா பேப்பரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெறவில்லை – அமைச...
இன்றுமுதல் ஒன்லைனில் ரயில் பயண சீட்டுகளை வழங்க நடவடிக்கை - இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் ...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 11 இலட்சத்து 80 ஆயிரத்து 946 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை!
|
|
|


