க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையில் கட்டுப்பாடு – பலதரப்பும் கடும் எதிர்ப்பு!

Sunday, April 1st, 2018

இவ்வருடம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் நிலையங்களின் நகர எண்ணிக்கையை குறைப்பதற்கு பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய நகரங்களிலும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய நகரங்களிலும் மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய நகரங்களிலும் சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை, மத்திய மாகாணத்தில் கண்டி தென் மாகாணத்தில் காலி, மாத்தறை, வட மத்திய மாகாணத்தில் அநுராதபுரம் ஊவா மாகாணத்தில் பதுளை வடமேல் மாகாணத்தில் குருநாகல், குளியாப்பிட்டி ஆகிய 16 நகரங்களில் மட்டும் விடைத்தாள் திருத்தும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

விடைத்தாள் திருத்தும் காலம் 14 நாட்களாக மட்டுப்படுத்தப்படுவதுடன் பரீட்சை விடைத்தாள் திருத்துவதற்கென இரு மடங்கு ஆசிரியர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் கல்முனை நகரில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையம் மத்திய மாகாணத்தில் நுவரெலியா, தென் மாகாணத்தில் அம்பாந்தோட்டை, ஊவா மாகாணத்தில் மொனராகலை, வட மத்திய மாகாணத்தில் பொலனறுவை, வட மேல் மாகாணத்தில் புத்தளம் ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருந்த விடைத்தாள் திருத்தும் நிலையங்களும் இல்லாமலாக்கப்பட்டுள்ளன.

பரீட்சைத் திணைக்களத்தால் க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நிலையம் எண்ணிக்கை குறைக்கப்பட்டமைக்கெதிராக கல்வித்துறைசார் தொழிற்சங்கங்கள் கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளன. வழமை போன்று சகல விடைத்தாள் திருத்தும் நிலையங்களையும் மீளவும் ஏற்படுத்த வேண்டுமெனவும் அவ்வாறு பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்படாவிட்டால் ஆசிரியர்கள் க.பொ.த உயர்தர விடைத்தாள் திருத்தும் வேலைகளிலிருந்து விலகி பகி~;கரிக்க வேண்டிய நிலையேற்படும் எனவும் கல்வித்துறைசார் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Related posts: