கோழித்தீன் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

கோழித் தீன் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பேராதனை மிருக உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தில் (24) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;
அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது சோள உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விலங்குணவு உற்பத்தியை அதிகரித்து கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை ஏற்றத்தைக் குறைக்க முடியும்.
இன்று கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை ஏற்றத்தில் விலங்குணவு விலையேற்றம் முக்கிய பங்களிப்பை செலுத்துகிறது.
கோழிப் பண்ணையாளர்கள் அதிக விலை கொடுத்து கோழித் தீன் போன்றவற்றை கொள்வனவு செய்வதன் காரணமாக அவர்களது உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. எனவே விலங்குணவுக்கான செலவினத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கோழி மற்றும் முட்டை விலையேற்றத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|