கோரிக்கை விடுத்தால் பேருந்து சேவை வழங்கப்படும் – இலங்கை போக்குவரத்து சபையின் உதவிப் பொது முகாமையாளர் தெரிவிப்பு!
Thursday, May 13th, 2021
நாடுமுழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடு காரணமாக இன்று வியாழக்கிழமை இரவு 11 மணிமுதல் வரும் மே 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை பேருந்து சேவைகள் நடைபெறாது என இலங்கை போக்குவரத்து சபையின் உதவிப் பொது முகாமையாளர் தவானா பாண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் –
நாளை ஒரு விடுமுறை நாளாக இருக்கும் என்றும், பயணம் தடை செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு போக்குவரத்து தேவையில்லை. எனவேதான குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும், அத்தியாவசிய கடமைகளைச் செய்ய வரும் சுகாதார மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் தங்கள் தேவைகளின் அடிப்படையில் கோரிக்கை விடுத்தால், அவர்களுக்கு பேருந்து சேவைகள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இந்திய - இலங்கை இடையே பாலம் அமைக்கும் செய்தி வதந்தி : ஜனாதிபதி!
கடைகளில் விற்பனையாகும் மருந்துகளை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் - கொரோனா தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்...
சுமார் 68 ஆயிரம் இலங்கையர்கள் திரும்ப காத்திருப்பு – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தகவல்!
|
|
|


