கோப் அறிக்கையை பரிசீலனை செய்ய விசேட கூட்டம் – மத்திய வங்கி ஆளுநர்!

மத்திய வங்கியின் முறி விற்பனை தொடர்பில் வெளியாகியுள்ள கோப் அறிக்கை தொடர்பில் ஆராய மத்திய வங்கியின் நிதிச்சபை எதிர்வரும் 4ஆம் திகதி கூடவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிதிச்சபையின் விசேட அமர்வாகவே இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் இதன்போது கோப் அறிக்கை குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெளிவான சாட்சியங்கள் இருக்குமானால் தமது அதிகாரிகளானாலும் நடவடிக்கையை எடுக்க முடியும் என்று ஆளுநர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்களின் பதிவுகள் இரத்து!
அஞ்சல் வாக்களிப்புக்கான இறுதிச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு!
திருநெல்வேலி விடுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் - சிறுமியின் அம்மம்மா கொலைக் குற்றச்சாட்டி...
|
|