கோப்பாய் வைத்தியசாலையில் 18 ஆயிரம் பேருக்கு சிகிச்சை- 111 பேர் டெங்கு நோயாளர்கள்
Sunday, January 20th, 2019
கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் கடந்த ஒரு வருடம் 18 ஆயிரம் வெளிநோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர் என கோப்பாய் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ். மாவட்டத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் வாழும் மக்களின் சுகாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் இவ் வைத்தியசாலையின் 5 நோயாளர்கள் விடுதிகளும் 65 நோயாளர்கள் படுக்கை வசதிகளும் உள்ளன.
இவ் வைத்தியசாலையில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் 1550 பேர் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் இதில் 111 டெங்கு நோயாளர்களாக இனம்காணப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
Related posts:
மின் ஒழுக்கு: குடிசை வீடு முற்றாக அழிவு – பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தற்காலிக வீடமைத்து கொடுக்க ...
நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!
காபன் நிகர பூச்சிய நிலை நாடாக இலங்கையை உருவாக்க நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகா...
|
|
|


