கோப்பாய்ப்  பொலிஸார் இருவர் மீது கொக்குவில் பகுதியில் தாக்குதல்: மேலும் இருவர் கைது !

Thursday, August 3rd, 2017
யாழ்.கோப்பாய்ப்  பொலிஸார் இருவர் மீது  கொக்குவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்களைக் கோப்பாய்ப்  பொலிஸார் இன்று வியாழக்கிழமை(03) கைது செய்துள்ளனர்.
நல்லூர்  அரசடி வீதியைச் சேர்ந்த முத்து என அழைக்கப்படும் யோகராஜா சதீஸ் (வயது-18) மற்றும் அருள்சீலன் பெட்ரிக் தினேஷ் (வயது- 18)  ஆகிய இரு சந்தேகநபர்களே இவ்வாறு கைது  செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவ்விருவரும் எதிர்வரும் ஆகஸ்ட்- 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (30)  கொக்குவில் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான இரு பொலிஸ் அதிகாரிகள் யாழ்ப்பாணம் போதனா   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts:

அரசியல் நோக்கங்களை ஆதரிப்பவர்களாக அல்லாமல் காலத்துக்கு பொருத்தமான கல்வி முறையை முன்வையுங்கள் - ஜனாத...
உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு அமுல் - நாடுமுழுதும் அவசர கால சட்டம் பி...
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டியத் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது - நீதி அமை...

பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு - அரச ​சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ள...
நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கும் கொரோனா தொற்றுறுதி - நெருக்கமாக தொடர்பை பேணியவர்களை கண்டறிய...
வேலை செய்ய முடியாதவர்களை நீக்கிவிட்டு, வேலை செய்யக்கூடிய நபர்களை பணியில் இணைத்துக்கொள்ளுங்கள் – அமை...