கோபா குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண தெரிவு !

Friday, February 24th, 2023

கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவுசெய்யப்பட்டுள்ளார்

குழுவின் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில், இந்த தெரிவு இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் முன்னதாக கோபா குழுவின் தலைவராக செயல்பட்டார்.

இதேவேளை, நேற்றையதினம் கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு, முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவுசெய்யப்பட்டார்.

அத்துடன், அரசாங்க நிதிப் பற்றிய குழுவின் தலைராக, ஆளுங்கட்சியினால் பிரேரிக்கப்பட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டிருந்மையும் குறிப்பிடத்தக்கது

Related posts: