கோண்டாவில் பகுதியில் முறுகல் நிலை: இருவர் கைது!
Monday, December 18th, 2017
கோண்டாவில் பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற முறுகல் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோண்டாவில் – புட்சட் வீதியிலுள்ள கடையொன்றில் பணி புரிந்துக் கொண்டிருந்த ஊழியர்களுக்கும், மோட்டார் சைக்கிளில் அங்கு சென்ற 6 பேருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த கருத்து முரண்பாட்டின் பின்னர் அங்கிருந்து சென்றவர்கள் கூரிய ஆயுதங்களுடன் திரும்பி வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொதுமக்கள் குழுமிய நிலையில் தாக்குதல் நடத்த வந்தவர்கள் வாள் மற்றும் இரும்பு குழாய்களை கைவிட்டு சென்றுள்ளனர். முரண்பாடு தொடர்பில் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
Related posts:
ஒக்டோபர் 9 ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மூடப்பட்டும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கவனம் !
ஜனாதிபதி உத்தரவு - பொதுமக்கள் அமைதியை பேணுவதற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையை கடமையில்!
|
|
|


