கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்ட வர்த்மானி வெளியீடு!

Monday, November 18th, 2019

1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது தொடர்பான சட்டத்தின் 56 ஆவது சரத்தின் கீழ் கோட்டாய ராஜபக்ஷ இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்ததெசப்பிரியவின் கைச்சாத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்தற்காக இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நூற்றுக்கு 52.25 சதவீத வாக்குகளை பெற்று கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிப் பெற்றிருந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதா 41.99 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார்.

Related posts: