எதிர்வரும் 9 ஆண்டுகளில் தெற்காசியாவில் வயது முதிர்ந்தவர்களை அதிகம் கொண்ட நாடாக இலங்கை உருவாகும் – ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் அறிக்கை!
Friday, January 22nd, 2021
எதிர்வரும் 9 ஆண்டுகளில் தெற்காசியாவிலேயே வயது முதிர்ந்தவர்களை அதிகம் கொண்ட நாடாக இலங்கை இருக்கும் என ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஒவ்வொரு 5 நபர்களுக்கும் ஒருவர் 60 வயதைக் கடந்தவராக இருப்பார் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் அவர்களில் பெருமளவானோர் பெண்கள் என்றும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வயது முதிர்ந்தவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக, ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம், ஹெல்ப் எஜ் ஸ்ரீலங்கா அமைப்புடன் இணைந்து, பல நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைக்கத் தீர்மானம்!
கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப்பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை – அம...
இலங்கை கிரிக்கெட் கட்டமைப்பில் உள்ள ஆளணியை மாற்றுவதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது - முழுக்...
|
|
|


