கொழும்பு துறைமுக நகரத்தை ‘நிதி வலயமாக’ மாற்ற புதிய சட்டம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

கொழும்பு துறைமுக நகரத்தை ‘நிதி வலயமாக’ மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இன்று பிற்பகல் கொழும்பில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற 2023 வர்த்தக மத்தியஸ்த கருத்தரங்கில் உரையாற்றிய ஜனாதிபதி, புதிய சட்டம் போர்ட் சிட்டியை ‘கொழும்பு நிதி வலயமாக’ மாற்றும் என்றும், அதற்கு கடல்சார் நடவடிக்கைகளுக்கான அதிகார வரம்பை வழங்கும் என்றும் கூறினார்.
இது தொடர்பான புதிய சட்டம் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாளையதினம் மின்சாரம் தடைப்படும்- மின்சாரசபை!
யாழ். ஆஸ்பத்திரியில் தாயும் சேயும் மரணம் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சோகம்
கொரேனானா தொற்று - மேலும் 15 பேர் பலி!
|
|