கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் மூழ்கிய கப்பல்!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் பாரிய கப்பல் ஒன்று முழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் இந்நிலையில் குறித்த கப்பலில் இருந்து 11 மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து 11 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் மூழ்கியுள்ளது. Mutha Pioneer என்ற சரக்குக் கப்பலே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.குறித்த கப்பல். டொமினிக்கன் குடியரசு கொடியுடன் இந்த கப்பல் பயணித்துள்ளது.
குறித்த கப்பலில் இருந்த 11 மாலுமிகளில் 10 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும்இ ஒருவர் இந்தோனேசியாவை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து குறித்த இடத்திற்கு விரைந்த இலங்கை கடற்படையினர் அவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
Related posts:
வலிகாமம் தெற்கு பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு...
யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு – கொடையாளர்களிடம் அவசர கோரிக்கை விடுக்கிறார் வ...
பாதீட்டில் யோசனை முன்வைக்கப்பட்ட விசேட பண்ட - சேவை வரி ஜனவரிக்கு பின்னர் அமுலாகும் - நிதியமைச்சின் ச...
|
|