கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் தீ விபத்து – 50 வீடுகள் சேதம் என பொலிஸார் தகவல்!
Monday, March 15th, 2021
கொழும்பு – கிராண்ட்பாஸ், பிரதேசத்திலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 50 வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.40 மணியளவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவம் பொலிஸாஸ் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கிராண்ட்பாஸ், கஜிமாவத்தை பிரதேசத்திலுள்ள வீடொன்றின், ஒளிரும் விளக்கு ஊடாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேவேளை தீயைக் கட்டுப்படுத்த சுமார் 5 தீயணைப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கொழும்பு துறைமுக மேற்கு முனையம் இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி!
அத்தியாவசியப் பொருட்களை நிவாரண விலையில் பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை!
தொழில்வாய்ப்பு தொடர்பில் ஜப்பானிய அதிகாரிகளுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கலந்துரையாடல்!
|
|
|


