கொழும்பு கறுவா தோட்டம் பகுதியில் உள்ள கட்டடத்தில் பாரிய வெடிப்பு !

Saturday, November 20th, 2021

கொழும்பு – கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரீட் வீதியில் அமைந்துள்ள கட்டடமொன்றில் இன்று (20) காலை வெடிப்பு சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது. 

பழைய குதிரை பந்தய திடலின் பார்வையாளர் அரங்கின், கீழ் தளத்தில் அமைந்துள்ள  சர்வதேச உணவுத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான உணவு விடுதியில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவினால் இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் வெடிப்பு சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவினரும் காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தற்போது தீக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். அத்துடன் இச்சம்பவத்தினால் எவருக்கும் உயிர்ச் சேதங்களும் காயங்களும் ஏற்பட்டதாக இதுவரை பதிவாகவில்லையெனக் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


வடக்கு- கிழக்கில் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்திச் செய்ய நடவடிக்கை- கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய...
மயக்க மருந்து இதுவரை குழந்தைகளுக்கு செலுத்தப்படவில்லை - பதவி விலகவும் ஆலோசனை என சுகாதார அமைச்சர் தெர...
கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இம்மாத இறுதியில் புதிதாக கிராம சேவகர்கள் நியமிக்கப்படுவர் - பிரதமர் தி...