கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்தது ஜசீரா எயார்வேஸ்!
 Monday, November 14th, 2022
        
                    Monday, November 14th, 2022
            
குவைத் எயார்லைன்ஸ் ஜசீரா எயார்வேஸ் கொழும்புக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.
ஜசீரா எயார்வேஸ் குவைத்துக்கும் கொழும்புக்கும் இடையில் வாரத்திற்கு மூன்று முறை விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.
இதேவேளை, இந்த புதிய விமானங்கள் கொழும்பில் இருந்து 50க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இணைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்புக்கான மேலதிக விமான சேவைகள் மூலம் இலங்கையில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என்றார் அமைச்சர்.
சமீபத்திய வாரங்களில், பிரான்ஸ், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ரஷ்யாவிலிருந்து பல விமான நிறுவனங்கள் கொழும்புக்கான விமானங்களை மீண்டும் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இன்று பிரதமர் நியூசிலாந்து பயணம்!
புதிதாக 28,000 புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்!
வாகன இலக்க தகடுகளில் மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கான அமைச்சரவை அனுமதி !
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        