கொழும்பில் மீண்டும் பதற்றம்: சக்தி வாய்ந்த வெடி குண்டொன்று மீட்கப்பட்பு!

Tuesday, April 23rd, 2019

நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் கொழும்பில் சக்தி வாய்ந்த வெடி குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வெடிகுண்டானது, கொழும்பு கிங்ஸ்பெரி நட்சத்திர ஹோட்டலை அண்டியுள்ள பகுதியிலிருந்து படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட வெடி குண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருவதுடன், அந்த பகுதியில் இருந்து மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் நாட்டில் மீட்கப்பட்ட குண்டுகளை விட, கிங்ஸ்பெரி ஹோட்டலுக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட குண்டானது மிகவும் சக்தி வாய்ந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சக்தி வாய்ந்த குண்டானது சிலவேளைகளில் வெடித்திருந்தால் பாரியளவிலான சேதங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்த சம்பவத்தை அடுத்து பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்பட்டு இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts:


இலங்கைப் பிரதிநிதிகள் - எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் காப்புறுதி உரிமையாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தை ...
தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு - நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொது மக்கள...
இராணுவத்தினரை ஏன் நினைவுகூரவில்லை? - பாரபட்சமாக செயற்படுகின்றது சர்வதேச மன்னிப்பு சபை என பாதுகாப்பு...