கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுவதில் உண்மை இல்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுவதில் உண்மை இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பொதுமக்கள் கொள்ளைச் சம்பவங்கள் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக சிலர் பொய்யான பிரசாரங்களை பரப்புவதாக, காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் சிறப்பு அங்காடிகளையும், வீடுகளையும் உடைத்து பொருட்களை கொள்ளையிடும் சம்பவங்கள் சில பிரதேசங்களில் பதிவாகியுள்ளன. இந்தநிலையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பயணிகள் பேருந்துகளில் மேலும் மாற்றம் : ஆலோசிக்கிறது அரசாங்கம் !
கல்வித்துறை மறுசீரமைக்கப்படாவிட்டால், மாணவர்கள் உயர் கல்வியை விட்டு விலகி வேறு வழிகளில் ஈடுபடுவதை தவ...
தலைவர் பதவிக்கு சுமந்திரன் ஶ்ரீதரன் இருமுனைப் போட்டி – முக்கிய உறுப்பினர்களுக்குள் வலுப்பெற்றுள்ள மு...
|
|