கொறோனா வைரஸ் எதிரொலி : இலங்கையில் முகத்திரைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு!

கொறோனா வைரஸ் சீன நாட்டவர்களினால் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக பொது மக்கள் அதிகமாக முகதிரைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
அத்துடன் நேற்றையதினம் இலங்கையில் கொறோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள ஒருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் முகத்திரையை பயன்படுத்துவது தொடர்ந்தும் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
இதனால் நாட்டின் பெரும்பாலன மருந்தகங்களில் முகத்திரைகள் விரைவாக விற்பனையாவதாக அவற்றின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், தற்போது காணப்படும் அதிக கேள்வியால் முகத்திரைகள், சில மருந்தகங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Related posts:
மேலும் இரண்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவபீடங்கள்!
புதிய போக்குவரத்து சட்டத்தை வாபஸ் பெற அரசாங்கம் தீர்மானம்?
அதிக சம்பளத்துடன் 4,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் - மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்...
|
|