கொரோனா வைரஸ் தாக்குவது எப்படி? – வெளியானது இலங்கை பேராசிரியர் கூறும் புதிய தகவல்!

கொரோனா வைரஸ் தொற்றுடைய ஒருவரிடமிருந்து 4 மீற்றர் தூரம் வரை பரவல் காணப்படும் என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக நரம்பியல் அமைப்பின் பொது மக்கள் வழிப்புணர்கள் தொடர்பிலான உலக அமைப்பின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் சீனாவின் வுஹானில் ஆய்வாளர்கள் சிலர் மேற்கொண்ட ஆய்விற்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த நோயாளி தங்கியிருக்கும் வைத்தியசாலையின் அறை, பயன்படுத்திய கழிப்பறை, பயணித்த பாதைகள், கையினால் பிடித்த பொருட்கள் ஆகியவற்றில் இந்த கொரோனா தொற்றியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் வைத்தியர்களின் பாதணிகளில் கொரோனா பரவியிருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இலங்கையில் சிறந்த முறையில் சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவித்த பேராசிரியர் எவரும் குறித்த நோய் தொடர்பில் அதிகம் அச்சப்படத் தேவையில்லை. ஆனாலும் மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|