கொரோனா வைரஸ் : உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி!

Tuesday, February 11th, 2020

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸைக் கண்டறியும் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோயறிதல் மற்றும் தனிமைப்படுத்தலுக்கான இத்தகைய மையங்களை நிறுவுவதற்காக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் செயற்பட்டு வருவதாகவும் குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், சோதனை நடவடிக்கைகளுக்கு அவசியமான வைரஸ் மாதிரிகள் பற்றாக்குறை இருப்பதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 1018 பேர் பலியாகியுள்ளதாகவும் அவர்களில் 1016 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் எனவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும் வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,அனைத்து ஆப்பிரிக்க நாடுகளும் இப்போது கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறியும் திறன் கொண்டவை என்று நம்புவதாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

Related posts: