கொரோனா வைரஸ் – ஆபத்தான நிலையில் மூன்று பேர்!
 Thursday, March 26th, 2020
        
                    Thursday, March 26th, 2020
            
இலங்கையில் கொரோனா தொற்றியமையினால் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மற்றுமொரு நபர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளதாக IDH வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இருவர் நிமோனியா காய்ச்சல் காரணமாக அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனைர்.
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் ஒரு நோயாளியேனும் பதிவாகாத நிலையில் இலங்கையில் இதுவரையில் பதிவாகிய நோயாளிகளின் எண்ணிக்கை 102 ஆகும்.
102 பேரில் மூன்று பேர் முழுமையாக குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளதாக சுகாதார சேவை இயக்குனர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        