கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்ட நபர்கள் தொடர்பில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு!
Sunday, March 15th, 2020
நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்ட நபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் ஊடாக சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவதன தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என் சந்தேகத்தில் 110 பேருக்கும் அதிகமானோர் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவு உள்ளிட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நாளையுடன் குறைவடையும்!
கோட்டாபய தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ள இலங்கை!
இந்திய உயர்ஸ்தானிகருடன் சபாநாயகர் விசேட சந்திப்பு - நீண்டகாலப் பொருளாதார நன்மைகளை ஏற்படுத்துவது குறி...
|
|
|


