கொரோனா பேரழிவைக் கட்டுப்படுத்த இலங்கையில் வலுவான சுகாதார கட்டமைப்பு உள்ளது – ஜெனிவாவில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டு!.

Thursday, October 21st, 2021

இலங்கையில் கொரோனா பேரழிவைக் கட்டுப்படுத்த வலுவான ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நோயைத் தாண்டி உலகில் சுகாதார அமைப்புகளில் பின்னடைவை உருவாக்குவதற்கான நிலை தொடர்பான அறிக்கையை நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் மூலம் உலக சுகாதார அமைப்பின் வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் –

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட வேலைத்திட்டம் மற்றும் சமூக மட்டத்தில் இருந்து உயர் மட்டத்திற்கு சுகாதார சேவை அதிகாரிகளின் பங்களிப்பு மிகவும் உதவியாக இருந்தது.

இதேநேரம் இலங்கையானது நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்தாலும், நமது நாடு சுகாதார குறிகாட்டிகளில் அதிக செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளதுடன், அதை உலகின் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடக் கூடியதாக இருக்கிறது  என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: