கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 97ஆக உயர்வு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!
Tuesday, March 24th, 2020
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 93ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணுடன் 94பேர்) அதிகரித்துள்ளது.
நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 227 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.
அத்துடன், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா உள்ளிட்ட 32 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3 ஆயிரத்து 290 பேர்வரை தங்கவைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.
இதனிடையே இலங்கையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி வெளியிட்ட தகவலுக்கு அமைய அந்த எண்ணிக்கை 97ஆக அதிகரித்துள்ளது.
Related posts:
மத்தியவங்கி பிணை முறி மோசடி விவகாரம்: நாடாளுமன்றில் விவாதம்!
யாழ் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - அத்தியாவசிய பொருட்களினதும் விலை உயர்வுகளு...
சுற்றறிக்கை காலாவதியான பின்னர் அரச பணியாளர்கள் 5 நாட்கள் கடமைக்கு அழைக்கப்படுவர் - பொது நிர்வாக அமைச...
|
|
|


