கொரோனா பரவல் மத்தியில் டெங்கு நோயின் பரவலும் அதிகரிப்பு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை!

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள அதேநேரம், அடுத்த வாரமளவில் டெங்கு நோயாளர்களது எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்திய அருண ஜயசேகர அச்சம் வெளியிட்டுள்ளார்.
தற்போது நாட்டின் பல இடங்களில் மழை மற்றும் வெள்ள சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் அடுத்தவாரம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக கொழும்பு மாவட்டம், டெஙங்கு நோயின் அதிக அச்சுறுத்தல் மிக்க பகுதியாக காணப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கம்பஹா, களுத்துறை, காலி, இரத்தினபுரி, கேகாலை, குருணாகல் மற்றும் கண்டி மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவல் அபாயம் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொதுமக்கள் டெங்கு நுளம்புகள் பரவுவதை தடுக்கும் வகையில் தங்களது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறும் வைத்தியர் அருண ஜயசேகர வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|