கொரோனா நோயாளி இனங்காணப்பட்ட ஹோட்டலில் தங்கியிருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் – நாடாளுமன்றில் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

யாலயில் கொரோனா வைரஸ் நோயாளியொருவர் தங்கியிருந்த ஹோட்டலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் காணப்பட்டார் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
ரோனா வைரஸ் நோயாளியொருவர் கண்டுபிடிக்கப்பட்ட யால ஹோட்டலில் சஜித் பிரேமதாச தங்கயிருந்தார் என அவர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
யால ஹோட்டலில் சஜித் பிரேமதாச தங்கியிருந்ததை அறிந்த சுகாதார அதிகாரிகள் அவரை உடனடியாக எச்சரித்தனர் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுகாதார அமைப்பு எவ்வளவு சிறந்தது என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளதுடன் நாங்கள் அவருக்கு தகவல்களையும் அவர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளையும் வழங்கினோம் எனவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா: இலங்கையை பாராட்டிய சர்வதேச ஊடகவியலாளர் !
மின்சாரக் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு மின்சார விநியோகத்தை நிறுத்தும் நடைமுறை அனைவருக்கும்...
எந்த ஆட்சியிலும் ஊழலை இல்லாதொழிக்க முடியாது - நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவிப்பு!
|
|