கொரோனா தொற்று : விடுக்கப்பட்டோருக்கு வீடுகளில் மீளவும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தல் – இராணுவத் தளபதி!

Monday, April 6th, 2020

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாள்கள் கண்காணிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் வீடுகளில் மீளவும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தலை கடைப்பிடிக்குமாறு இராணுவத் தளபதியும் கோரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான லெப். ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் கொரியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாள்கள் கண்காணிக்கப்பட்டு வீடு திரும்பிய ஒருவருக்கு 10 நாள்களின் பின்னர் கோரோனா தொற்றுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே இராணுவத் தளபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Related posts:


சகல அரச சேவைகளையும் மாவட்ட மற்றும் பிரதேச ரீதியில் பரவலாக்குவது காலத்தின் அவசியமாகும் - ஜனாதிபதி கோட...
கடந்த 5 வருடங்களை விட இந்த வருடம் விவசாய ஏற்றுமதியால் 86 ஆயிரம் மில்லியன் வருமானம் - ஏற்றுமதி விவசாய...
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஜனவரியில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் - நீதி அமைச்சர் விஜயதாச ...