கொரோனா தொற்று: தும்மலின்போது 27 அடி வரைக்கும் பாய்ந்து செல்லும் – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
Thursday, April 2nd, 2020
கடந்த சில மாதங்களாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் உலக மக்கள் 45000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிப்புக்குள்ளோரின் எண்ணிக்கை 9 இலட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதித்த ஒருவர் தும்மும்போது அவரது மூக்கில் இருந்து வெளிப்படும் நீர்த்துளி 27 அடி வரை வைரஸுடன் பயணிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி) ஆராய்ச்சியாளர் லிடியா பவுரவுபியாவால் எழுதிய கட்டுரையை “ஜேர்னல் ஆப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன்” என்ற மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்றால், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம். குறைந்தபட்சம் ஆறு அடி தூரம் (2 மீட்டர்) விலகி இருக்க வேண்டியது அவசியம்.
Related posts:
|
|
|


