கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் ஆபத்து – விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் எச்ரிக்கை!

Monday, June 14th, 2021

இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த சில நாட்களிலும் கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இதன்போது அவர் தெரிவித்திருந்தார்.

அதேநேரம் பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமல்லாமல், சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: