கொரோனா தொற்று அதிகரிப்பின் எதிரொலி – இலங்கையர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை – சுகாதார பிரிவு நடவடிக்கை!

இலங்கை மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்காக நான்கு பேர் கொண்டு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மனியில் நடைமுறைப்படுத்தப்படும் சிறிய குழு பரிசோதனை முறையை இலங்கையிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்த குழுவின் பிரதானியான பிரதி சுகாதார பணிப்பாளர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸினை பரிசோதிக்கும் PCR இயந்திரங்கள் அரச மற்றும் தனியார் துறைகளிடம் 50 உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இயந்திரங்கள் மூலம் இதுவரையில் தினசரி 250 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தம்பதிகள்!
மே 20 ஆம் திகதியன்று நாட்டில் காணப்படும் கொரோனா நிலைமையை கருத்தில்கொண்டு வழிகாட்டி நடைமுறைகள் திருத்...
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு - கல்வி அமைச்சர் ஜி...
|
|