கொரோனா தொற்றுடன் தப்பி ஓடிய இளைஞர் பொரளையில் கண்டுபிடிப்பு !
Friday, October 23rd, 2020
சாலாவ பொது மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர் பொரளை பகுதியில் வைத்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நபருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டநிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய குறித்த இளைஞர் காலை ஆறு மணியளவில் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.இதனையடுத்து இவரை தேடும் பணியை காவல்துறையினர் முன்னெடுத்தனர்.
குறித்த நோயாளியின் தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ள நிலையில் அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டனர் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்!
உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை - இராணுவ...
கட்டுமானத் திட்டங்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பியுங்கள் - ஒப்பந்ததாரர்களுக்கு நகர அபிவிருத்தி மற்றும...
|
|
|


