கொரோனா தொற்றின் வேகம் அதிகரிப்பு – மேலும் 10 வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி!

நாட்டில் உள்ள மேலும் 10 வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் இரசாயனகூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்..
அதற்கமைய 5 அரச வைத்தியசாலைகள் மற்றும் 5 தனியார் வைத்தியசாலைகளுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 20 ஆயிரமாக அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமன் ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
கடும் வறட்சி – நாட்டில் 02 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம் !
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிதி உதவி - சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் தெரிவிப்பு!
|
|