கொரோனா தொற்றால் நிர்க்கதியாகியுள்ள 14 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு!

Friday, November 13th, 2020

கொரோனா தொற்று நிலைமையினால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்காக முன்னெடுக்கப்படும் அரச நிவாரண நடவடிக்கைகளில் இதுவரை சுமார் 14 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 43 ஆயிரம் குடும்பங்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த மாதத்திற்குள்ளும் இம்மாதம் 10 ஆம் திகதி வரையிலும் இவை வழங்கப்ப்டடுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்காக திறைசேரியிலிருந்து 7.56 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 7500 குடும்பங்களுக்கும் கம்பஹா மாட்டத்தில் 7000 குடும்பங்களுக்கும் களுத்துறை மாவட்டத்தில் 4000 குடும்பங்களுக்கும் 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை 5,000 ரூபா கொடுப்பனவிற்காகவே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கின்றது. இதற்காக 7.04 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர, 16 மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக திறைசேரியினால் மேலதிமாக 78.06 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சுகாதார அமைச்சின் கீழ் அமைக்கப்படும் கட்டடங்களுக்கான இடத்தெரிவில் அனுமதி பெறப்படவேண்டும்!
கொரோனோவால் மரணமடைந்தவர்களின் சடலங்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் - பருத்தித்துறை ஆதா...
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமனம் - பத்தாம் திகதிமுதல் கடமைகளை பொறுப்ப...