கொரோனா சிகிச்சைக்காக 28 ஆயுர்வேத வைத்தியசாலைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை – உள்நாட்டு மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவிப்பு!
Friday, June 18th, 2021
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 28 ஆயுர்வேத வைத்தியசாலைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் யாழ். கைத்தடி, பொரளை, ஹம்பாந்தோட்டை மற்றும் நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலைகளும் இவற்றில் அடங்குவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஏனைய 24 ஆயுர்வேத வைத்தியசாலைகளும் மாகாண சபைகளினால் நிர்வகிக்கப்படுகின்ற வைத்தியசாலைகளாகும்.
குறித்த 28 வைத்தியசாலைகளிலும் 2 ஆயிரத்து 500 நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும் என உள்நாட்டு மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீர்மின் உற்பத்தியை மேற்கொள்வதில் தொடர்ந்தும் நெருக்கடி!
எரிபொருள் விலைகள் அதிகரிப்பு – நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வந்ததாகவும் அறிவிப்பு!
மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழப்பு!
|
|
|


