கொரோனா அச்சுறுத்தல் : யாழ் மாவட்டத்தின் ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு உத்தரவு மீள் அறிவிப்பு வரை நீடிக்கப்பட்டுள்ளது
வட மாகாணத்தில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நாளை காலை (27) 6 மணிக்கு நீக்கப்படவிருந்தது.
எனினும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றும் நிலைமையை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு மாத்திரம் மீள் அறிவிப்பு வரை ஊரடங்கு உத்தரவினை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் ஏற்கனவே அறிவித்தமைக்கு அமைய காவல் துறை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் அனுமதி மறுப்பு!
இரட்டைக் குடியுரிமை உள்ள அரச அதிகாரிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் - பெப்ரல் அமைப்பு!
வடக்கில் சுற்றுலா மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் முதலீட்டு வாய்ப்பு தொடர்பில் யாழ் இந்திய துணைத...
|
|