கொரோனா அச்சுறுத்தல்: உங்கள் வயதான பெற்றோர்களுக்கு தெளிவூட்டுங்கள் – ஜனாதிபதி!
Saturday, April 4th, 2020
உங்கள் வயதான பெற்றோர்களுக்கும், உங்களுக்குத் தெரிந்த எந்தவொரு வயதானவர்களுக்கும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடும் பொது இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் தெளிவு படுத்துவதுடன் அவ்வாறான இடங்களுக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்க்குமாறும் அவர்களுக்கு அறிவுறுத்துங்கள் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அறிவிறுத்தியுள்ளார்.
கொரோனா நோய்க்கிருமியின் தாக்கம் வயதான மக்களிடையேதான் அதிகமாகக் காணப்படுகின்றது. இருந்தும் கூட இளம் வயதினர்கள் இடையேயும் இந்த நோயின் தாக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் சம அளவிலேயே காணப்படுகிறன. ஆனாலும் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அல்லது இந்த நோயினால் ஏற்படக்கூடிய மரணத்தின் வீதம் வயதானவர்களை விட இளம் வயதினரிடையே குறைவாகக் காணப்படுகிறது என்றும் அவர் சுடடிக்காட்டியதுடன் இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு COVID-19 நோய்க்கிருமித் தொற்று ஏற்பட்டால் – கடுமையான விழைவுகள் உருவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இளமையான மற்றும் வெளிப்படையாக ஆரோக்கியமாகத் தோன்றும் நபர்கள் கூட இந்த நோய்க்கிருமியின் காவிகளாகச் செயற்பட்டு நமது பலவீனமான பெற்றோருக்கு அல்லது அதிக ஆபத்தில் உள்ள வேறு எந்த நபருக்கும் நோயைக் கடத்திவிடக் கூடும். ஆகையால், பொது இடங்கள் அல்லது பெரிய மக்கள் கூட்டம் காணப்படும் இடங்களுக்கு வயதானவர்கள் செல்வதை முடிந்த அளவுக்குத் தவிர்க்க எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


