கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற தடுப்பூசி மாத்திரம் போதுமானதில்லை – நோய் ஆய்வு பிரிவின் பிரதானி சுட்டிக்காட்டு!
Friday, February 26th, 2021
கொரோனா தடுப்பூசியால் மாத்திரம் வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என தொற்று நோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் தடுப்பூசி போடாத அனைவரும் தொடர்ந்து சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தடுப்பூசி போடப்பட்டதால் அவற்றில் மீற முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கொவிட் தடுப்பூசிக்கு மது அல்லது புகைபிடிக்கும் பழக்கம் ஒரு தடையாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனமோ அல்லது தடுப்பூசியை தயாரித்த ஆராய்ச்சி நிறுவனங்களோ இதுவரையில் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உபதலைவர் - நிதியமைச்சர் இடையே உடன்படிக்கை கைச்சாத்து!
இலங்கையில் குறைந்த விலையில் சிறிய ரக இலத்திரனியல் வாகனங்கள்!
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா பரவல் இதுவரை சமூக தொற்றாக மாறவில்லை - மாவட்ட சுகாதார வைத்திய பணிப்பாள...
|
|
|


