கொரோனாவின் இரண்டாவது அலை முதலாவது அலையிலிருந்து வேறுபட்டது – குறைபாடுகள் அனைத்தும் நாளாந்தம் தீர்க்கப்படுகின்றது – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல!

கொரோனாவின் இரண்டாவது அலை முதலாவது அலையிலிருந்து வேறுபட்டுள்ளது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கொரோனா நிலவரம் தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான விசேட நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை முதலாவது அலையிலிருந்து வேறுபட்டதாக காணப்படுகிறது. இந்நிலையில் அரசாங்கம் இந்த மாற்றத்திற்கு தயாராகிவருகின்றது.
மூன்றாவது அலை ஏற்பட்டால் அதற்கு ஏற்றவிதத்தில் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மூன்றாவது அலை இரண்டாவது அலையிலிருந்து வித்தியாசமாகயிருக்கும்.
அரசாங்கம் தான் எதிர்கொண்டுள்ள குறைபாடுகள் அனைத்தையும் நாளாந்த அடிப்படையில் தீர்த்து வருகின்றது என்று குறிப்பிட்ட அமைச்சர், இதுவரை இழைக்கப்பட்ட தவறுகளை சரிசெய்வதற்கான அத்தியாவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
இச்சூழ்நிலையில், இந்த விடயத்தில் அரசாங்கம் தன்னால் எடுக்ககூடிய நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|